Police Department News

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் காவல் ஆளிநர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின் பேரில் பெண் காவலர்களுக்காக (Women Empowerment Refreshing Training Programme) சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று எழும்பூர், டான்பாஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஆயுதப்படை பெண்காவலர்களுக்கான, புத்தாக்க பயிற்சி முகாமை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பெண் காவலர்கள் பணியில் உத்வேகத்துடன் செயல்பட அறிவுரை வழங்கினார். மேலும் ஆயுதப்படை பெண் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இப்பயிற்சி முகாமில் ஆயுதப்படை பெண் காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பணியின்போது எவ்வாறு செயல்படுவது, குடும்பத்திற்கு எவ்வாறு நேரம் ஒதுக்குவது, தனது குழந்தைகளை நல்ல முறையில் பராமரிப்பது, பணிபுரியும் இடத்தில் சோர்வாகமால் பணியினை எதிர்கொள்வது, இக்கட்டான நேரங்களில் பெண்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் அதை தைரியமாக எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் உலகளவில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பெண்களை பற்றிய தொகுப்புகள் காணொளி காட்சி மூலம் காண்பிக்கப்பட்டு பணியில் உத்வேகத்துடனுடம் உறுதியுடனும் செயல்பட்டால் பெண்களும் உயர் நிலைக்கு செல்லலாம் என பெண்காவலர்களுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் 500 ஆயுதப்படை பெண்காவலர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இப்பயிற்சி முகாம் ஆயுதப்படையிலுள்ள 2357 பெண்காவலர்கள் பயனடையும் வகையில் 5 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்) இணை ஆணையாளர் சாமுண்டீஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் பாலாஜிசரவணன், (தலைமையிடம்),சௌந்தராஜன் (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.