Police Department News

தமிழ்நாடு டிஜிபி., நெல்லை, தென்காசி,கன்னியிகுமரி, தூத்துகுடி காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழ்நாடு டிஜிபி., நெல்லை, தென்காசி,கன்னியிகுமரி, தூத்துகுடி காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை

நெல்லையில் தொடர் கொலைகள் நடப்பதால் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு, அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்களிடம் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் கடைசியாக நின்றார்.

திடீரென சல்யூட் அடித்து டி.ஜி.பி தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி செய்த சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், டி.ஜி.பி.யிடம் பேச ஆர்வம் காட்டினார். இதனை புரிந்து கொண்ட டி.ஜி.பி சைலேந்திரபாபு அருணாச்சலத்தை தனியாக அழைத்துச் சென்று பேசினார். அப்போது அருணாச்சலம் ”ஆடியோ வெளியட்டது தவறு தான் சார். மிகுந்த மன அழுத்தத்தால் வேறு வழியின்றி ஆடியோ வெளியிட்டு விட்டேன் என்று கூறியதுடன் நெல்லை மாநகர காவல் துறையில் காவலர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்தும் டி.ஜி.பி.யிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

இதை கேட்ட டிஜிபி சைலேந்திரபாபு ”மனம் தளராமல் தொடர்ந்து பணியாற்றுங்கள். அதிகாரிகளின் டார்ச்சர் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். உங்களுக்கு இடமாறுதல் வேண்டும் என்றால் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்” என்று முதுகில் தட்டிகொடுத்து அருணாச்சலத்துக்கு ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டியதாக கூறப்படுகிறது. டி.ஜி.பி.யின் இந்த செயல் போலீசாருக்கு சற்று ஆறுதல் கொடுப்பதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.