Police Department News

மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா?

மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா?

திருப்புரங்குன்றம் ஹார்விபட்டி திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் வேடர்புளியங்குளம் விலக்கு. மிசோரியர்மில் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானாக்கள் அமைக்க மாநகராட்டி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் திருநகர் வழியாக செல்கின்றன. ஹார்விபட்டி பஸ் ஸ்டாபில் குழப்பம் ஏற்படும் வகையில் இரும்பு தடுப்புக்கள் உள்ளன.வாகன ஓட்டிகள் எப்படி செல்லுவது என தெரியாமல் தவிக்கின்றனர். திருநகர் 3 ஸ்டாபில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும், அங்கும் குழப்பம் ஏற்படுவதாக இரும்பு தடுப்புகள் உள்ளன. வேடர்புளியங்குளம், எம்ஜியார் காலனி, அடுக்குமாடி குடியிருப்புக்கள் 4 வழிச் சாலைக்கு செல்வோர்கள் புளியங்குளம் விலக்கிலிருந்து வலது புறம் செல்ல வேண்டும் ரோட்டை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.