Police Department News

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட சைபர் காவல் நிலையம் சார்பாக 22.10.2021 அனறு மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், சைபர் குற்றங்களை தடுக்கவும், அதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கணினி வழி குற்றங்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளதால் மாணவ மாணவிகள் அதில் கவனமாக இருக்க வேண்டும், பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கல்வி ஒன்றுதான் அழியாத செல்வம், சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்று முன்னேறினால்தான் அந்த சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாறும், மாணவ மாணவிகளுக்கு கல்வியோடு கூடிய ஒழுக்கம்தான் அவர்களை சிறந்தவர்களாக மாற்றும் என்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் தலைமையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன், உதவி ஆய்வாளர் திரு. சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் திரு. மகேந்திரன், கல்லூரி செயலர் திரு. டாக்டர். ஜெயக்குமார், சட்ட பேராசிரியர் திருமதி. பாசமலர், திட்ட அலுவலர்கள் டாக்டர் திரு. கதிரேசன், டாக்டர் திரு. மருதையா பாண்டியன், டாக்டர் திரு. அபுல்கலாம் ஆசாத், திருமதி. கவிதா திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பாலாஜி, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன், உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் உட்பட காவல்துறையினர் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.