தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வீர வணக்கம் நிகழ்வு
காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தின் நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழவில் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அக்டோபர் 21− ம் நாள் ஆண்டு தோறும் காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1959− ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீனா இராணுவத்தினர் மறைந்திருந்துநடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தமிழ் நாட்டிலும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் பணியின் போது வீரமரணம் அடைந்த தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் V. பாலு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறுபகுதிகளை சேர்ந்த துணை இராணுவப்படையினர் மற்றும் காவல் துறையினர் 377 நபர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
கடந்த 21 ம் தேதி ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார் அதனை தொடர்ந்து மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுனர் திரு. M.K.நாராயணன் ரியர் அட்மிரல் திரு. புனீட்சதா, காவல் துறை தலைமை இயக்குனர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குனர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர் J.விஜயராணி இ.ஆ.ப., மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் களப்பணியாற்றும் போது வீர மரணமடைந்த துணை இராணுவப்படையினர் மற்றும் காவல் துறையினருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
வீரமரணம் அடைந்த 377 நபர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 144 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
களப்பணியாற்றும் போது வீரமரணம் அடைந்த காவல் துறையினர் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி ஏற்று அவர்களின் வீரத் தியாகம் வீண் போகாது என்று காவலர் வீர வணக்க நாளான 21 ம் தேதி உறுதி மொழி ஏற்றனர்.