சுமார் 22 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தொலைந்து போன 110 செல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன்கள் தொலைந்த போனது தொடர்பான புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதன் பேரில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையில் கடந்த ஒரு மாதத்தில் சைபர் கிரைம் காவல் துறையின் துரித நடவடிக்கையின் மூலம் 110 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு செல்போன்களை தவறவிட்டவர்களிடம் முறையான ஆவணங்களை சரிபார்த்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் இன்று 22.10.2021 உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
காணாமல்போன மேற்படி 110 செல்போன்களின் மதிப்பு சுமார் ரூபாய் 22,00,000/- இருபத்தி இரண்டு லட்சம் ஆகும். மேற்படி செல்போன்களை மீட்பதற்கு சிறப்பாக செயல்பட்ட முதல் நிலை காவலர்கள் திரு. பிரபுராஜா, திரு.சரவணக்குமார் மற்றும் காவலர் திரு. சியாமளன் ஆகியோரை காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.