மதுரையில் ரூ.7.62 லட்சம் மதிப் புள்ள கள்ளநோட்டு பண்டலை வீசிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் வெளியூரில் இருந்து வந்த லாரியில் இருந்து குடிநீர் பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்தனர். ரயில் நிலையம் அருகே லாரி நின்றிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பண்டல் ஒன்றை லாரிக்குள் வீசி விட்டு தப்பினார்.
இதைக் கவனித்த லாரி ஓட்டுநர் பூபதி, அந்த பார்சலை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுகுறித்து அவர் திலகர்திடல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் அந்த பண்டலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 381 எண்ணிக்கை கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் இருந்தன. அதனுடன் வெற்று நோட்டுகளும் இருந்தன. இதன் மதிப்பு ரூ.7.62 லட்சம் ஆகும். போலீ ஸாரின் ஆய்வில் இந்த நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என தெரியவந்தன.
அவை மலையாள மொழி செய்தித்தாளில் பண்டலாக கட்டப் பட்டு இருந்ததால், கேரளாவில் இருந்து மதுரைக்கு கள்ள நோட்டு களை புழக்கத்தில் விட அந்த நபர் கொண்டு வந்திருக்கலாம் என்றும் போலீஸில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தால் லாரியில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் எனவும் போலீ ஸார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதி யில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.