மதுரை மாநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மதுரை யானைக்கல் தரை பாலத்தில் ஆக்கரமிப்பு அகற்றம்
மதுரை சிம்மக்கல் செல்லூரை இணைக்கும் பாலமான யானைக்கல் தரை பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் கடைகளும் வாகனங்களும் ஆக்கிரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மேலும் ஆக்கிரிமிப்பாளர்ளால் பாலத்தில் குப்பையும் குவிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் செய்வதை தடுத்து கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வர வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். அதன்படி மதுரை மாநக காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு ஆறுமுகசாமி ஆகியோர்களின் உத்தரவின்படி ஆக்கிரிமிப்புகள் அகற்றப்பட்டன.