மதுரை, வண்டியூரில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது
மதுரை வண்டியூர் மது பானக்கூடம் அருகே கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் பதுங்கி இருப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்னஹா அவர்கள் உத்தர விட்டார் இதன்படி மாநக ர வடக்கு துணை ஆணையர் திரு. ராஜசேகர் அவர்கள் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி ஆணையர் சூரக்குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர் அங்கு மூங்கில் புதருக்குள் 5 பேர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா 3 அரிவாள்கள் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரையும் தனிப்படை போலீசார் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் அதில் அவர்கள் எஸ். புளியங்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாட்டுக்கறி அருண் வயது 29/22, யாகப்ப நகர் சித்தி வினாயகர் கோவில் தெரு பிரதாப்குமார் வயது 31/22, அன்பு நகர் வெற்றி வேல் முருகன் என்ற காட்டுப்பூச்சி வயது 29/22, வண்டியூர் பாலாஜி நகர் மாரிமுத்து என்ற மண்டை மாரி வயது 30/22, வளையங்குளம் பெருமாள் கோவில் தெரு ராம்குமார் வயது 30/22, என தெரியவந்தது. அவர்கள் மீது மாநகரில் பல் வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.வண்டியூர் மது பானக்கூடத்திற்கு வரு வோருக்கு இந்த கும்பல் கஞ்சா சப்ளை செய்து வந்தது இது தவிர அவர்கள் சம்பவ இடத்தில் பதுங்கி இருந்து குற்ற செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியிருந்தது. அம்பலத்திற்கு வந்தது