Police Department News

சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும். குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 17.01.22-ந்தேதி அமர்வுநீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி சிலை அருகில், சாலையில் நடத்து சென்ற ஒருவரிடம் சட்டை பாக்கெட்டில் இருந்து பணம் ரூ.500 பறித்து சென்றதாக கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரியான பாரதிதாசன் (23) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் குற்றவாளியான எதிரி கொழுப்பு பாரதி (எ) பாரதிதாசன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, மேற்படி எதிரி பாரதிதாசன் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.