Police Department News

மதுரை மாவட்ட காவல்துறை மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு

மதுரை மாவட்ட காவல்துறை மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் ஒய்ஸ்லின் அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு .நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு, மதுரை டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக, மாணவர்களிடையே பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், குறிப்பாக இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஓடிபி எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், (Cryptocurrency) மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in* என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.