Police Department News

காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும் , அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும் காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை தடுக்கும் பொருட்டு 19 30 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும் , பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் ,குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு பாலியல் குற்றம் குறித்தும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இதில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இதனால் அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம்‌ செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும். செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.என்றும் பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும் , போக்குவரத்து விதிமுறைகளையும் தலைக்கவசத்தின் அவசியத்தையும், பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும், போக்சோ சட்டம் யார் மீது பாயும், குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும்
பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருதல் ஜாதி அடையாளங்களான பனியன்கள் கை பட்டைகள் தவிர்க்கவும் மேலும் சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை தடுக்கும் பொருட்டு 19 30 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும் அவர் அறிவுரை கூறினார். இதில் குழந்தை நல சிறப்பு அலுவலர் தலைமை காவலர் பார்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.