பெண்கள் மற்றும் குழ்ந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கையெடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அலுவலகர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான சம்பவங்களை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தாக்கலாகும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முறையாக நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு துரிதமாக சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறது
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2013ஆம் வருடம் தாக்கலான கற்பழிப்பு மற்றும் கருச்சிதைவு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் வயது 34, த/பெ ஆண்டிகாளை, கவுல் பட்டி, கிராமம் விக்ரமங்கலம் அஞ்சல், உசிலம்பட்டி தாலுகா மதுரை மாவட்டம் என்பவருக்கு எதிராக மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட மகிளா சிறப்பு நீதிமன்றம் கற்பழிப்பு குற்றத்திற்கு 10 ஆண்டுகளும் ரூபாய் ஆயிரம் அபராதமும், கருசிதைவு குற்றத்திற்கு 10 ஆண்டுகள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அப்பெண்னை ஏமாற்றிய குற்றத்திற்கு ஒரு வருடம் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து இன்று 20.5.2022 தீர்ப்பு அளித்துள்ளது.
இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றி எதிரிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.