மதுரையில் 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி வந்த நிலையல் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம்
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக இளைஞர்கள் குறிப்பாக 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களை நிறுத்தி அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றத்திற்கு ரூபாய் 500 ம் மேலும் வாகனத்தை கொடுத்து அனுமதி வழங்கிய பெற்றோர்கள் வாகன உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 ம் தலைக்கவசம் அணியாத அவர்களுக்கு ரூபாய் 100 ஆக மொத்தம் ஒரு வாகனத்திற்கு ரூபாய் 1100 அபராதம் விதித்து அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட நபர்களை தெப்பக்குளம் அருகில் உள்ள ஒரு திருமண அரங்கில் அழைத்து அந்த சிறுவர் சிறுமியருக்கும் பெற்றோர்களுக்கும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் திரு ஆறுமுகச்சாமி அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆணையர்கள் திருமலைக்குமார் திரு மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய காவல் துணை ஆணையர் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுரை வழங்கினார் மேலும் இதுபோன்ற வாகனம் ஓட்டுவது தொடர்ந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் புதிய சட்ட திருத்தத்தின்படி ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உயிரின் மகத்துவத்தை கூறி அவர்களிடம் எழுதி வாங்கி வாகனங்களை விடுவித்தார் இந்த விழாவில் மதுரை மாநகரை சேர்ந்த அனைத்து காவல் ஆய்வாளர்களும் அனைத்து சார்பு ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்