குட்கா மற்றும் புகையிலை விற்பனைக்கு எதிரான சிறப்பு சோதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு R.சிவபிரசாத் இ.கா.ப. அவர்களின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்ட காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
15.06.22 மற்றும் 16.06.22ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய 54 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 85,000/- ரூபாய் மதிப்புள்ள சுமார் 44. 397 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 7 கடைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சமயநல்லூர் பஜார் பகுதியில் பூக்கடை மற்றும் டீக்கடை நடத்தி வரும் மீனாட்சி சுந்தரம், த/பெ குருசாமி ஊர்மெச்சிகுளம் என்பவர் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட கூலிப் (cool lip) மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை மேற்படி கடையில் விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
மேற்படி கடைகள் இரண்டும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது
மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுடைய கடைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு முறைப்படி சீல் வைக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ஆர் சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்