Police Department News

ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது?

ஒருவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி ஈரோடு காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்புகிறார். இது சட்டப்படி சரியா? சட்டம் என்ன சொல்கிறது?

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இயல் – 7 Processes to compel the production if things பற்றி கூறுகிறது. அதாவது பொருட்களை ஒப்படைக்க கோரி கட்டாயப்படுத்தும் வகையில் நீதிமுறை கட்டளைகளை போலீசார் பிறப்பிக்கலாம் என்று கூறுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 91 ஆனது நீதிமன்றம் அல்லது காவல்துறை அதிகாரி எவரும் ஒரு வழக்கின் புலன் விசாரணையின் போது ஒரு ஆவணம் அல்லது ஒரு பொருளை ஒப்படைக்க கோரி எவருக்கும் எழுத்து மூலமாக நேரில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பலாம் என்கிறது. அதேசமயம் 91(2) ஆனது அழைப்பாணை அனுப்பப்பட்ட நபர்தான் நேரில் ஆஜராகி ஆவணத்தை அல்லது பொருளை ஒப்படைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் சார்பாக யார் வேண்டுமானாலும் ஆஜராகி சம்மந்தப்பட்ட ஆவணத்தை அல்லது பொருளை ஒப்படைக்கலாம்.
எனவே பிரிவு 91 ன்படி காவல்துறையினர் ஒரு ஆவணத்தை அல்லது ஒரு பொருளை ஒப்படைக்க கோரி மட்டுமே அழைப்பாணை அனுப்ப அதிகாரம் உண்டு. விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி இந்தப் பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்ப காவல்துறையினருக்கு அதிகாரமில்லை. அதேவேளை சம்மந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. அவர் சார்பில் யார் வேண்டுமானாலும் ஆஜராகி ஆவணத்தை கொடுத்து விடலாம்.

அடுத்ததாக

சிஆர்பிசி பிரிவு 160 ன் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்ப காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதா? என்று பார்க்கையில் இந்த பிரிவின் கீழ் ஒருவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் FIR பதிவு செய்த பிறகே காவல்துறையினருக்கு ஏற்படுகிறது.

அடுத்ததாக காவல்துறையினர் தனது அதிகார எல்லைக்குள் உள்ள நபரையோ அல்லது பக்கத்து காவல்நிலைய அதிகார எல்லைக்குள் உள்ள நபரையோ மட்டுமே இந்த பிரிவின் கீழ் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை அனுப்பலாம். பக்கத்து காவல் நிலைய எல்கைகள் என்பது 10 காவல் நிலைய எல்கைகள் ஆகும்.

உதாரணமாக தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பக்கத்தில் உள்ள திருச்செந்தூர் ஊரில் வசிக்கும் நபரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி இந்த பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பலாம். ஆனால் இதே திருவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர், மதுரையில் வசிக்கும் ஒரு நபரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி இந்த பிரிவின் கீழ் அழைப்பாணை அனுப்பி கூப்பிட முடியாது.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் JAMSHED ADIL KHAN & ANR. v. UNION TERRITORY OF JAMMU AND KASHMIR AND ANR என்ற வழக்கில் இதுகுறித்து தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

சாமானியனும் அடிப்படை சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும். சட்டம் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

நன்றி.
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்
திருவைகுண்டம்
தூத்துக்குடி மாவட்டம்
செல் – 8870009240

Leave a Reply

Your email address will not be published.