சென்னை திருமுல்லைவாயலில் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேசன்(31) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்குளித்ததில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் வெங்கடேசன்தீக்குளித்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்
என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அமைப்பிடம் புகார் அளித்த மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். பி.எப்.ஐ., உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் என்.ஐ.ஏ.,விற்கு புகார் அளித்ததன் பேரில் இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னர், டி.ஜி.பி., மதுரை கலெக்டருக்கு இவர் மீண்டும் அனுப்பிய மனுவில், ‘ஹிந்து அமைப்புகளை சேர்ந்த சிலரை குறிவைத்து […]
மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை விழுப்புரம்: மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டையில் எரும்பூண்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) அடித்துக்கொலை செய்யப்பட்டார். சுரேஷை அடித்துக் கொன்று மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு சென்றவர்களை அவலூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார். தீயணைப்பு நிலைய குடியிருப்பில் குடியிருந்து வரும் வெள்ளைச்சாமி மகன் ஆனந்தகுமார் என்பவர் 13.04 .2023 தேதியன்று மாலை தனது இருசக்கர வாகனமான TN 11 L 3003 என்ற ஹோண்டா யூனிகார்ன் வாகனத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள கீர்த்தி மெஸ் சென்று தனது இரு சக்கர வாகனத்தை கீர்த்தி மெஸ் வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தேனீர் அருந்திவிட்டு பின்னர் அங்கிருந்து நிலைய பணியின் காரணமாக நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களோடு கடைதெருவிற்கு […]