04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் முறை சட்டம் 2022, அமுல். இனி குற்றவாளிகள் தப்ப முடியாது.
04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் சட்டம் 2022 அமுலுக்கு வந்து விட்டது.
ஏற்கனவே இருந்த சிறைவாசிகளை அடையாளம் காணும் சட்டம் 1920 கடந்த 04/08/2022 உடன் காலாவதியாகி விட்டது.
இச்சட்டத்தின்படி ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட அல்லது தண்டனையடைந்த ஒரு நபரின் கைவிரல் ரேகை கால் விரல் ரேகை புகைப்படம் விந்து சிறுநீர் ரத்தம் உமிழ்நீர் ரோமம் போன்றவற்றை இனி மேல் காவல்துறையினர் சிறைத்துறையினர் குற்றவியல் நடுவர்கள் மற்றும் செயலர்கள் எடுத்து பாதுகாப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
75 வருடங்கள் வரை இந்த உடற்கூறு அளவுகளை அல்லது உடல் சம்பந்தமான உடல் கூறு மாதிரிகளை சேமித்து வைத்து பின்னர் குற்ற சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கூறுகளுடன் ஒப்பிட்டு பார்த்து யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க முடியும்.
இந்தச்சட்டம் அமுலுக்கு வந்தால் அது ஒரு காவல்துறை ராஜ்ஜியமாக மாறிவிடும் எதிர் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிராக தவறாக இச்சட்டம் பிரயோகிக்கப்படும் என்று பல் வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும் கூட இச்சட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
காவல் துறையினர் பலபிரயோகம் எதுவும் செய்யாமல் விஞ்ஞான ரீதியாக விசாரணை செய்வதற்கு இந்த சட்டம் மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.