Police Department News

மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 178 ன்படி பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது அபராதம் பயணிகளுக்கா? அல்லது நடத்துனர்களுக்கா?

மோட்டார் வாகனச் சட்ட பிரிவு 178 ன்படி பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் போது அபராதம் பயணிகளுக்கா? அல்லது நடத்துனர்களுக்கா?

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 178 இன்படி, பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்வது குற்றம் என பேரூந்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும்.
இதில், 178(1), 178(2) என இரண்டு உட்பிரிவுகள், உள்ளன.
ஆமாம், உண்மையில் நடத்துனர்களின் கடமை பயணிகளை எண்ணிப் பார்த்து பயணச் சீட்டை வழங்குவதே. பயணச் சீட்டு வாங்குவது பயணிகளின் கடமைதான் பயணிகளுக்கு இந்தப் பொறுப்பு இருந்தாலும், பயணிகள் விவரிக்க இயலாத பல்வேறு சூழ்நிலைகளில் பயணிப்பவர்கள். ஆகையால், பயணச் சீட்டைப் பெற தவறி விடலாம்.
எனவே, பயணியிடம் பயணச்சீட்டை கேட்டு வழங்காத நடத்துனருக்கே பிரிவு 178(1) இன்கீழ் முதலில் அபராதம் விதிக்கப்பட வேண்டும். பின்னரே 178(2) இன்கீழ் பயணிக்கு விதிக்கப்பட வேண்டும்.
ஆனால், இது வரை நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்பட்டதே இல்லை
இதனையும் மீறி பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் அந்த அபராத தொகையை செலுத்த சட்டப்படி குற்ற விசாரணை முறை சட்டம் 1973 இன் விதி 424 இன்படி, சட்டப்படியான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தால் அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் போது, அதைச் செலுத்தவும் கூட, அறுபது நாள் கால அவகாசமும், மூன்று தவனைகளும் இருக்கிறது.

இம்மூன்று தவனைகளில் முதல் தவனையை சரியாக முப்பது நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தில் சரி பாதியையும், மீதி பாதி தொகையை எப்படி வேண்டுமானாலும் இரு தவனைகளில் செலுத்தலாம்.
இப்படி செலுத்தாது போனால் மட்டுமே, சிறையில் அடைக்க முடியும். இப்படி அடைத்தப் பின்னுங்கூட, அபராதத்தை கட்டி விட்டு வெளியே வரலாம்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 69 இன்படி, இதிலும் சிறப்பு என்றால், ரூ 500 அபராதத்துக்கு ஐந்து நாள் சிறைவாசம் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டால், ரூ 400 ஐக் கட்டினால் போதும் என சட்டம் நியாயமாகவே இருக்கிறது.

அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் அனைத்து குற்றங்களுக்கும் இது பொறுந்தும்

Leave a Reply

Your email address will not be published.