மதுரை மாநகரில் செயின் பறிப்பு குற்றவாளிகள் கைது, 9 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 25,500/- ரொக்கம் பறிமுதல்
மதுரை மாநகரம் தல்லாகுளம் திருப்பாலை கூடல்புதூர் அண்ணாநகர் மற்றும் தெப்பக்குளம் பகுதியில் செயின் பறிப்பு மற்றும் SS காலனி பகுதிகளில் 2 சக்கர வாகனம் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் திரு.N. மோகன்ராஜ் வடக்கு, அவர்களின் நேரடிப்பார்வையில் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் திரு. V.சுரேஷ்குமார் மற்றும் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திரு. A. சூரக்குமார் அவர்களின் மேற்பார்வையில் அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி N.அனுராதா அவர்களின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியே சேர்ந்த வைரமணி ஆத்திகுளத்தை சேர்ந்த வீரகார்த்திக் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் மேற்கண்ட பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் இரண்டு சக்கர வாகனத்திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 20,500/- ம் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்ய உதவியாக இருந்த தனிப்படையினரை மதுரை மாநக காவல் ஆணையர் திரு செந்தில்குமார் அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் திரு. மோகன்ராஜ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.