ரவுடிகளை ஒழிக்க அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு புதிதாக தொடக்கம்
4 ஆய்வாளர்கள் தலைமையில் 40 போலீசார் களம் இறங்குகிறார்கள்
சென்னையில் ரவுடிகளை ஒழிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.
கூடுதல் காவல் ஆணையர் ஒருவரின் மேற்பார்வையில் உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் இந்தப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார்கள் இடம் பெற்றுள்ளார்கள் இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க அதிதீவிர குற்றத்தடுப்பு படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன் பேரில் சென்னையில் சீரியஸ் கிரைம் ஸ்குவாட் என்ற பெயரில் அதிதீவிர குற்றத்தடுப்பு படை தொடங்கப்பட்டுள்ளது அது தற்போது நடமுறைக்கு வந்துள்ளது. தென் சென்னை வட சென்னைக்கு கூடுதல் கமிஷனர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள் தென் சென்னை கூடுதல் கமிஷனராக கண்ணணும் வடசென்னை கூடுதல் கமிஷனராக செந்தில்குமாரும் இருக்கிறார்கள். இவர்களின் கீழ் அதிதீவிர குற்ற தடுப்பு படை செயல்படும். அதிதீவிர குற்றத்தடுப்பு படைக்கு தற்போது ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென் சென்னைக்கு ஆய்வாளர்களாக எஸ்.குணசேகரன் சி.பிரபு ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வட சென்னைக்கு எஸ்.ஸ்ரீதர் கே.பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கார் ஜிவால் அவர்கள் நியமனம் செய்துள்ளார்கள். இந்த வடசென்னை தென் சென்னை அதிதீவிர குற்றத்தடுப்பு படைக்கு 2 உதவி கமிஷனர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களது தலைமையில் இந்த அதிதீவிர குற்றத்தடுப்பு படை செயல்படும். மேலும் வட சென்னைக்கு 20 போலீசாரும் தென் சென்னைக்கு 20 போலீசாரும் மொத்தம் 40 போலீசார்கள் நியமிக்கப்பட உள்ளனர். சென்னையில் உள்ள ரவுடிகள் காட்டபஞ்சாயத்து உள்பட முறைக்கேடான செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிதீவிர குற்றத்தடுப்பு படை கடும் நடவடிக்கைகள் எடுப்பார்கள்.