Police Department News

குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி

குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கான குழந்தை உரிமை, பாதுகாப்பு குறித்த பயிற்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சுஜித்குமார் கலந்துக்கொண்டு மாவட்டத்தில் குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு குழந்தை நல காவல் அலுவலர்கள் பங்கு குறித்து சிறப்புரையாற்றி தலைமை உரை ஆற்றினார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சேவை நிறுவனம் இயக்குனர் கோவிந்தராஜ் வரவேற்றார். குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை நலக்குழுவின் பணிகள், குழந்தைகளுக்கான மாவட்ட அளவில் இருக்கும் அமைப்புகள்,
மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் குழந்தை திருமண தடுப்பு அலுவலர் நித்யா அவர்கள் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் அவர்கள் கிராம ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது, பங்கேற்பது குழந்தை நல அமைப்புகளுடன் இணைந்து பயணிப்பது குறித்து பயிற்சி அளித்தார்கள்.
குழந்தை நலக் குழு உறுப்பினர்கள் பௌலின், நேத்தலிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார். பயிற்சியில் குழந்தை நல காவல் அலுவலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை நோடல் சைல்டு லைன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.