தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
பாலக்கோடு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து காவலர்களும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர் .சிறப்பு விருந்தினராக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மது அருந்திவிட்டு தினமும் தம்மை அடித்து துன்புறுத்தும் குடிகார அப்பா தனக்கு வேண்டாம் என தெலங்கானா மாநிலத்தில் 11 வயது சிறுவன், காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் போலீஸாரை நெகிழச் செய்தது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மாத்கால கூடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், சசிகுமார் (11) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சசிகுமார், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு […]
தலைக்கவசம் அணிவது குறித்து பொற்றோர்களிடம் விழிப்புணர்வு காஞ்சிபுரம் பி.3 தாலுகா காவல்துறையினர் ஓரிக்கை பகுதியில் உள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காஞ்சி தாலுக்கா துணை ஆய்வாளர் ராஜமாணிக்கம் உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான் அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது […]