திருநெல்வேலி மாவட்டம், மயலால்காணி குடியிருப்பு கிராம மக்களுக்கு கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்து கலந்துரையாடி சமூதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய வி.கே புரம் காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற 3 ம் நாள் வி. கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயலால்காணி குடியிருப்பு மக்களுக்கு வி. கே. புரம் காவல் ஆய்வாளர் திரு. சண்முகம் அவர்கள் சமூக மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்டவற்றை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்றும், குழந்தைத் திருமணம் செய்வது, தண்டனைக்குறிய குற்றம் எனவும், குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியம் எனவும், சமூகத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்து தங்கள் குழந்தைகளிடம் எடுத்துக் கூற வேண்டும் எனவும், அறிவுரை வழங்கினர். மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது மலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்தாலும், யாராவது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும், தங்களுக்கு யாராலும் தொந்தரவு ஏற்பட்டாலும் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறினார்.
காவல் ஆய்வாளர் கிராம மக்களிடம் சென்று கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி