தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நிலத்தகறாரில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலை செய்து வரும் ஆறுமுகம் (40) முத்து (36) அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு அட்சன் பால் கம்பெனி பின்புறத்தில் சுமார் 1.5 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அதே பகுதியில் சிவன் மற்றும் அவரது தம்பி சரவணன் ஆகியோருக்கு சொந்தமான 4 .1/2 ஏக்கர் உள்ளது.
இதில் சிவன் குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தின் வரப்பில் இருந்த மரங்கள் தனது நிலத்திற்க்கு இடையூறாக இருப்பதாக கருதிய ஆறுமுகம் குடும்பத்தினர் மரங்களை வெட்டி அப்புறபடுத்தினர், இதனால் இரு தரப்பிற்க்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆறுமுகம் தனது நிலத்தை சர்வே செய்ய ஆட்களுடன் சென்றார், அப்போது சிவன் குடும்பத்தினர் நிலத்தை சர்வே செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர், இதில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் கொடுவாள் மற்றும் கட்டையால் ஒருவரையொருவர் தாக்கியதில்
பலத்த காயமடைந்த இரு தரப்பினரும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.