Police Department News

செங்கிப்பட்டி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து..

செங்கிப்பட்டி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து..

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா சிதம்பரப்பட்டியை சேர்ந்த எபினேஷன் வயது 30.என்பவர் இவர் வல்லத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஜெயராஜ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது வளம்பகுடி பிரிவு சாலை அருகே பல்சரில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வழிபறியும் ஈடுபட்டுள்ளனர். எபினேசர் இடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு அவரிடமிருந்த ஏடிஎம் பறித்துள்ளனர் பின் பின் நம்பரை கேட்டுள்ளனர் அப்பொழுது பின் நம்பரை சொல்ல மறுத்த எபினேசரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்த எபினேஸரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செங்கிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூன்று மர்ம நபர்கள் நேற்று தொடர்ந்து மூன்று இடங்களில் வழிபறியில் ஈடுபட்டுள்ளனர் மாரியம்மன் கோவில் பகுதியில் 7:30 மணியளவில் கத்தியை காட்டி ஒரு நபரிடம் பணம் மற்றும் செல்போன் பதித்துள்ளனர் அதை எடுத்து செங்கிப்பட்டியில் இரவு 8 மணிக்கும் அடுத்து பிள்ளையார் கோவிலில் இரவு 11 மணிக்கு வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. செங்கிப்பட்டியில் தொடர் வழிபறி நடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.