Police Department News

குப்பை கொட்டினால் ரூ 500 அபராதம். குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு… அதிரடி காட்டிய மேயர்…

குப்பை கொட்டினால் ரூ 500 அபராதம். குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு… அதிரடி காட்டிய மேயர்…

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதமும், அதை வீடியோ ஆதாரமாக அனுப்புபவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குப்பை கொட்டினால் ரூ 500 அபராதம்

வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் வீடுகளுக்கு ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, முதல் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படவுள்ளன.

குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு

தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும். அதே நேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.