மதுரை பேரையூர் அருகே கஞ்சா விற்ற ஆந்திரா வாலிபர் கைது
மதுரை பேரையூர் அருகே கம்மாளப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக அக்.7ல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்ததில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கம்மாளபட்டி ஆனந்த் 21. ஆனந்தகுமார் 27, சிவராமனை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா மொத்த கொள்முதல் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.பி., சிவப்பிரசாத் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், மேலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்.ஐ.கள் துரைசிங்கம், அருண் ஆகியோர் ஆந்திரா மாநிலம் சென்றனர்.
விசாகப்பட்டினம் மாவட்டம் பொங்காரம் மெரக்கல்லு பகுதியைச் சேர்ந்த உட்டு அப்பாவுராவ் மகன் அப்பாவு நாயுடுவை 26, கைது செய்து விசாரிக்கின்றனர்.