Police Department News

மகளிர் குழுவினருக்கு நிதி நிறுவனம் ரூ. 1. 80 லட்சம் இழப்பீடு

மகளிர் குழுவினருக்கு நிதி நிறுவனம் ரூ. 1. 80 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கிறிஸ்டியாநகரம் பகுதியை சேர்ந்த உதயசூரியன் மனைவி ஜெயதங்கம்.

இவர் அதே பகுதியை சேர்ந்த திருநாமக்கனி, வைகுண்டலெட்சுமி, ஜான்சிராணி, பேச்சியம்மாள், வேல்கனி, விஜயசெல்வி, விஜயராணி, மல்லிகா, அமுதா, விஜயராணி, ஆரோக்கியம் ஆகியோருடன் சேர்ந்து மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்தனர்.

சுய உதவி குழு உறுப்பினர்கள் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் நபர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் கடன் பெற்றனர்.

அந்த கடனுக்கு வாரம் ரூ. 364 வீதம் 104 வாரங்களுக்கு தவணை தொகை செலுத்தி முடித்தனர்.

அவர்களுக்கு நிதி நிறுவனம் சார்பில் கடன் செலுத்தி முடித்தற்கான சான்று வழங்கப்படவில்லை.

இதனால் சிபில் மதிப்பு குறைந்து அவர்களால் பிற கடன்கள் பெற முடியவில்லை.

இதனால் மகளிர் குழு உறுப்பினர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதன்பின் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அதில் தனியார் நிறுவன ஊழியர் குழு உறுப்பினர்களின் முதல் தவணையை செலுத்தாமல் கையாடல் செய்ததால் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

தாமதம் ஏற்பட்டதாக நிதி நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்குள் கடன் திருப்பி செலுத்தியதற்கான சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.