காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
ஹலோ போலீஸ் ஹெல்ப்பின் மூலம் பொதுமக்களுக்கு உதவி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் ஹலோ போலிஸ் ஹெல்ப்பிலிருந்து உதவி கேட்டவர்க்களுக்கு மத்திய பாகம் காவல்நிலையம் பொறுப்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்னன் மத்திய பாகம் எழுத்தர் ஜெயகுமார் ஆகியோர் மக்களுக்கு அரிசி காய்கனி தொகுப்பு பைகளை வழங்கினர்.
மதுரை காமராஜபுரம் பகுதியில் மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை. கடை உரிமையாளர் கைது தெப்பக்குளம் போலிசார் அதிரடி நடவடிக்கை மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் சிறுவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக தெப்பக்குளம் போலிசாருக்கு ரகசிய தவவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலிசார் சிலரை பிடித்து விசாரித்தனர் அப்போது காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த பொருளும் திருடப்படாத அதிசாயம் மதுரை மாநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் கட்டபொம்மன் நகர், பாண்டியன் தெருவில் தன் தாயார் முருகேஸ்வரியுன் வசித்து வருபவர் S.அஜய்குமார் வயது 22/21, இவர் சர்வேயர் காலனியில் தோனி பாய் ஓட்டலில் வேலை செய்து வருகிறார் இவரது தாயார் முருகேஸ்வரி செல்லூர் அய்யனார் கோவில் சர்ச் தெருவிலுள்ள சரவணாபுக் பைண்டிங் கம்பெனியில் வேலை செய்து […]