புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதத்தொகை அதிகரிப்பால் போக்குவரத்து விதி மீறல்கள் குறையும்
போக்குவரத்து காவல் துணை ஆணையர் பேட்டி
போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.ஆறுமுகசாமி அவர்கள் கூறும் போது மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்துக்களை தடுக்கவும் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்களின் அறிவுரையின் பேரில் போக்குவரத்து போலிசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மதுரை மாநகரப்பகுதி வளர்ந்த பகுதியாகும் இங்கு சென்னை திருச்சி கோவையை போன்று பெரிய சாலைகள் கிடையாது ஆனாலும் வாகனங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து கொண்டே செல்வதால் இருக்கும் சாலைகளை அகலப்படுத்திதான் போக்குவரத்தை சீர் படுத்தி வருகிறோம் இது தவிர பல் வேறு இடங்களில் ஒரு வழி பாதை சாலையின் நடுவில் தடுப்பு போன்றவை அமைத்து விபத்துக்களை தடுத்து வருகிறோம் தற்போது கூட மாட்டுத்தாவனி பஸ் ஸ்டான்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆம்னி பஸ்கள் வெளியே உள்ளே வரும் வழிகளை மாற்றி அமைத்திருக்கிறோம் கோரிபாளையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸூ நோயாளிகளின் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் உள்ளது அதனை குறைக்க விரைவில் அந்த பாதையை ஒரு வழி பாதையாக மாற்ற உள்ளோம் மதுரையில் விபத்துகள் என்று எடுத்து கொண்டால் சாலையை கடக்கும் பாதசாரிகள்தான் அதிகமாக விபத்தில் பலியாகிறார்கள் ஏனென்றால் நகரில் சிறிய சாலைகளாக இருப்பதால் ஏதாவது சந்து வழியாக சென்று விடலாம் என்று அந்த வழியாக செல்லும் போது சாலையில் நடப்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள் மேலும் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் அதி வேகத்தில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றினால் விபத்துக்கள் குறைவாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றித்தான் நகர் பகுதி உள்ளது அதை தாண்டி விரிவாக்க பகுதிகளை உறுவாக்கினால் போக்குவரத்து புறநகர் பகுதிக்கு செல்லும் ஆனால் அவ்வாறு செல்லாமல் இருப்பதால்தான் நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக உள்ளது நகருக்குள் எங்கும் வாகனங்கள் நிறுத்தங்கள் கிடையாது. எனவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ரோட்டில்தான் நிறுத்தி செல்கிறார்கள் எனவே போக்குவரத்து போலீசார் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி கொடுத்து போக்குவரத்து நெரிசலை குறைத்து வருகிறோம் மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தற்போது அபராத தொகை அதிகரித்துள்ளது இதன் மூலம் நேற்று 80 சதவீதம் தலைகவசம் அணிந்து செல்வதை காணமுடிந்தது. இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் கண்டிப்பாக குறையும் என்றார்