தனியார் விடுதிகளில் சோதனை தினமும் நடத்த டி.ஜி.பி. உத்தரவு
குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுதும் தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி பதிவேடுஉள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்’ என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.
சமீபத்தில் கோவையில் கார் குண்டுவெடித்து ஜமேஷா முபின் 29 பலியானார். இவரது வீட்டில் விதவிதமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்திற்கு பின் போலீசாரின் கவனம் சமூக விரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பிஉள்ளது.
உளவுத்துறை பலப்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் அன்றாட பணிகளில் மாற்றம்செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மாநிலம் முழுதும் மர்ம நபர்களின் நடமாட்டம் குற்றத்தடுப்பு தொடர்பாக குடியிருப்போர் நல சங்கத்தினருடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.
குற்றத் தடுப்பின்ஒரு அங்கமாக மாநிலம்முழுதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் தொடர் சோதனை நடத்தி சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை டி.ஜி.பி.சைலேந்திர பாபுபிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை செய்வது போலீசாரின் அன்றாட பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அங்கு வருகை பதிவேடு தங்கும் நபர்களின் விபரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யவேண்டும்.
சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் அவர்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். ‘சிசிடிவி’ கேமராக்கள் தடையின்றிஇயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.