Police Department News

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000/- அபராதம் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 2 வருடம் சிறை தண்டனை, மற்றும் ரூ.10,000/- அபராதம் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூக்கையா(65) என்பவரை பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. தென்னரசு அவர்கள் நீதிமன்ற இரண்டாம் நிலை காவலர் திரு.ரங்கநாதன் மற்றும் அரசு வழக்கறிஞர் அவர்களின் சீரிய முயற்சியால் நேற்று 14.11.2022-ம் தேதி மதுரை போதைப்பொருள் தடுப்பு (NDPS) நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மூக்கையா என்பவருக்கு 02 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.