காவல் துறைக்கு உதவுதலில் பொது மக்களின் கடமைகள்
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்குள்ளது போலவே கடமைகளும் உரிமைகளும் மற்றவருக்கும் உள்ளன என்பதை உணர வேண்டும் .
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் குற்ற நிகழ்வு ஆகியவற்றை பற்றி முன்னரே அறிந்தவர் அதைப் பற்றி உடனே காவல் துறையிடம் தெரிவித்தல் அக்குடிமகனின் தலையாய பொறுப்பு ஆகும் .
குற்ற நிகழ்வுகளை தடுக்க அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் .
அவருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் .
காவல் துறையினர் அவர்களது கடமைகளை நிறைவேற்றும் பணியில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் .
தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடலாம்
வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விபத்து பற்றி காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் .
விசாரணையில் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு புலன் விசாரணையில் காவல் துறையினருக்கு உதவி செய்தும் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளிக்க வேண்டும்.
தேவை ஏற்படின் அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கும் .
குற்ற நிகழ்வுகளை தடுத்தல் தாம் வசிக்கும் இடத்தில் பொருட்கள் திருட்டு போகா வண்ணம் தக்க பாதுகாப்பு செய்து கொள்ளுதல் சுற்றுப்புற பகுதிகளை கண்காணித்தல் ஆகியவை ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
புதியவர்கள் சந்தேகப்படும் முறையில் நடந்து கொள்பவர்கள் ஆகியோர் பற்றி காவல் துறையினருக்கு தக்க நடவடிக்கை எடுக்க உரிய நேரத்தில் தகவல் தருதலும் ஒரு குடிமகனின் கடமையாகும்.