காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு
காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு மாநிலத்திலேயே முதல் முறையாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் சரகத்தில் 144 கிராமங்கள் உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை இந்த வழியே செல்கிறது. காவல் எல்லை பெரிய அளவில் உள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும் குற்ற செயல்கள் மற்றும் விபத்துக்கள் ஆகியவற்றை கண்காணிக்க மாநிலத்தையே முதல் முறையாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் விபத்துக்கள் கண்காணிக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. எஸ் ஐ ஜவகர் குமார் மேற்பார்வையில் தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் கண்காணிப்பு பணியை காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் குற்ற செயல்கள் அதிக அளவில் நடக்கும் கிராமங்கள் கண்காணிக்கப்படுவதுடன் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் கண்காணித்து குற்ற செயல்களை தடுப்பதுடன் சாலை விபத்துகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.