Police Department News

போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம்

போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை மாநகர சாலைகளில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செல்கின்றனர்.

வாகனங்களின் முன் பக்கத்தில் நவீன ஒளி விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள், கண்களை கூச வைக்கும் தன்மை உடையவை. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்யும் தன்மை உடையவை. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மதுரை மாநகரில் ஓடும் இருசக்கர- 3 சக்கர- 4 சக்கர வாகனங்களில், கண்கூச வைக்கும் விளக்குகளின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். இது பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாநகரில் நேற்று மாலை 5.30 முதல் 5.35 மணி வரை சாலைகளில் வாகனங்களை தணிக்கை செய்து, கண் கூச வைக்கும் விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இன்ஸ்பெக்டர்கள் தங்க மணி (தெப்பக்குளம்), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), நந்தகுமார் (பெரியார் பஸ் நிலையம்), பூர்ணகிருஷ்ணன் (திருப்ப ரங்குன்றம்), தங்கப்பாண்டி (அவனியாபுரம்), ரமேஷ்குமார் (மீனாட்சி அம்மன் கோவில்), சுரேஷ் (தல்லாகுளம்), ஷோபனா (மதிச்சியம்), பஞ்சவர்ணம் (மாட்டுத்தாவணி) ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.

மதுரை மாநகரில் நேற்று மாலை போலீசார் ஆங்காங்கே உள்ள சந்திப்புகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். அப்போது பெரும்பாலான வாகனங்களில் கண் கூசும் தன்மை உடைய விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒளிவீச்சின் தன்மை குறைக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 நிமி டங்களில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தெப்பக்குளத்தில் மட்டும் 500 வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் கண் கூச வைக்கும் விளக்குகளின் உபயோகம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.