Police Department News

பாலக்கோடு மிகவும் பிரதி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது

பாலக்கோடு மிகவும் பிரதி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவானது கொடியோற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று 12 ஊர் கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் பக்தர்கள் அம்மன் வேடம், காளிவேடம் அணிந்தும், லாரிகட்டி இழுத்தல்,அந்தரத்தில் தொங்கியபடி செல்லுதல், காவடி ஆட்டம், கோலாட்டம், கரகாட்டம் ஆகியவை வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
பெண்கள் மாவிளக்கு தட்டு தலையில் சுமந்து திரெளபதி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 2கி.மீ தூரத்திற்க்கு நடந்து சென்று ஶ்ரீபுதூர்மாரியம்மன் கோவிலை அடைந்து வேன்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அம்மனுக்கு கோழி, கிடா ஆகியவற்றை பலியிடட்டு நேர்த்தி கடன் செலுத்தினர், கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் பொதுமக்களால் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் உள்ளுர் விடுமுறை அளித்திருந்தது.
இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.