Police Department News

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்

நீங்களும் வக்கீல்தான்

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது, எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்

வக்கீல் அப்படீன்னா என்ன அர்த்தம் தெரியுமா? நீதிமன்றத்தின் முன் அனுமதியோடு ஆஜராகி வாதிடும் ஒவ்வொரு நபரும் வக்கீல்தான் அப்படீன்னு குற்ற விசாரணை முறை விதிகள் 1973- ன் விதி 2(17) ,உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908- விதி 2(15) மற்றும் வழக்கறிஞர் சட்டம் 1961-ன் பிரிவு 32-ம் தான் கூறுகிறது.

முன் அனுமதி என்பதை வேறு ஒருவருக்காக நீங்கள் ஆஜராகும் போதுதான் வாங்க வேண்டும். நமக்கு நாமே வாதாடும்போது தேவையில்லை. ஏனென்றால் நமக்கு நாமே வாதாடுவது என்பது இந்திய சாசன கோட்பாடு 19(1)(அ)-ன் படி பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை என்பதன் கீழான அடிப்படை உரிமை.

வக்கீல்கள் எத்தனைதான் பட்டம் பெற்றிருந்தாலும், வழக்கறிஞர் அவையில் தொழில் செய்வதற்காக பதிவு செய்திருந்தாலும் வேறு நபருக்காக ஆஜராகும் ஒவ்வொரு வழக்கிலும், வழக்கறிஞர்கள் அடுத்தவர்களுக்காக வாதாடணும் அப்படீன்னா நீதிமன்றத்தின் முன் அனுமதி வாங்கித்தான் ஆகனும்.

இதைத் தான் வக்கீல்கள் ஒவ்வொரு வழக்கிலும் வக்காலத்து அதாவது தமிழில் பரிந்து பேசும் உரிமை கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இப்ப புரியுதா நீங்க வக்கீலுக்கு படிக்காவிட்டாலும் வக்கீல்தான்.

Leave a Reply

Your email address will not be published.