வடபழனி-கே.கே.நகரில் 2 பேரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு
சென்னை, எம்.ஜி.ஆர். நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அசோக் நகரில் உள்ள காலணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கே.கே.நகர் ஆர்.கே. சண்முகம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தனது செல்போன் சார்ஜ் இல்லாததால் ‘சுவிட்ச் ஆப்’ ஆகிவிட்டது அவசரமாக வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய கார்த்திக் அவரிடம் தனது செல்போனை கொடுத்தார். உடனே அந்த மர்ம வாலிபர் செல்போனுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதேபோல் வடபழனியில் வடமாநில வாலிபர் சுதர்சன் ஜெனா என்பவரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.
வடபழனி நெற்குன்றம் பாதையில் புதிய கட்டிட கட்டுமான பணிக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் திருடு போனது. இதுதொடர்பாக ஆவடியை சேர்ந்த பரத்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.