Police Department News

மதுரையில் போலி பட்டா வழங்கிய துணை தாசில்தார் கைது

மதுரையில் போலி பட்டா வழங்கிய துணை தாசில்தார் கைது

மதுரை கலைநகரில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர் கோபிலால். இவர் கடந்த 1990-ம் ஆண்டு ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹிர் என்பவருக்கு சொந்தமான காலியிடத்தை வாங்கி வீடு கட்டினார்.

இந்த நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடத்தை கோசா குளத்தைச் சேர்ந்த ராமன் மகன் ராஜா செல்வராஜ் என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றிக் கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து மதுரை மாநகர் நில அபகரிப்பு பிரிவில் 2021-ம் ஆண்டு கோபிலால் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது கோபிலால் குறிப்பிட்ட இடத்தை வாங்குவதற்கு முன் ராமன் என்பவரது பெயரில் இருந்துள்ளது. ராஜா செல்வராஜ் தனது தந்தையின் பெயர் ராமன் என்ற ஒற்றுமையை பயன்படுத்தி மேற்படி இடத்துக்கு அவரது பெயரில் பட்டா பெற்றது தெரியவந்தது.

மேலும் இதற்கான பட்டா மாறுதலை கிராம நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் பால்பாண்டி ஆகியோர் ஆய்வு செய்து அப்போதைய துணை தாசில்தாராக இருந்த மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தலின்பேரில் பட்டா வழங்கியுள்ளனர்.

இதையடுத்து ராஜா செல்வராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் முறைகேடு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மீனாட்சி சுந்தரத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதாகி உள்ள மீனாட்சி சுந்தரம் தற்போது மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.