திரைப்படங்களில்தான் காவல் உயர் அதிகாரிகள் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டு செல்வதுபோல் காட்டுவார்கள்..
ஆனால் அதே மாதிரியான உண்மையான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
நள்ளிரவில் சைக்கிளில் சாதாரண உடையில் காவல் நிலையத்துக்கு விருதுநகர் சூப்பிரண்டு சென்றுள்ளார்.
அவரை அங்கிருந்த இரவு நேர பணி காவலர் வழக்கம் போல பணியில் இருந்தார் முகம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார் வந்தது மாவட்ட உயரதிகாரி என காவலருக்கு தெரியாமல்போக நீங்கள் யார்? என்று கேட்ட ருசீகர நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணி அளவில் ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார் அவர் சாதாரண உடையில் இருந்துள்ளார் அங்கு இருந்த போலீஸ்காரரிடம், தான் ஒரு புகார் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.
உடனே அந்த போலீஸ்காரர், அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணிக்காக சென்று இருக்கிறார்கள். ஓரமாக உட்காருங்கள் அவர்கள் வந்ததும் கூப்பிடுகிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே அந்த நபர் அங்கிருந்து செல்லாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தார்.
பின்னர் அந்த நபர் நேராக காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறைக்கு சென்று அவரது நாற்காலியில் அமர்ந்துகொண்டார் அதனை கண்டு பணியில் இருந்த காவலர் அதிர்ச்சி அடைந்தார் பின்பு அவரை எழுந்திருக்கும்படி கூறினார்.
நீங்கள் யார்? என கேட்டுள்ளார் அந்த நபரோ, நான் யார் தெரியுமா? எனக்கேட்க, போலீஸ்காரர் குழப்பத்தில் தவித்து மீண்டும் நீங்கள் யார்? என பதிலுக்கு கேட்டுள்ளார். பின்னர், நான்தான் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் என்று சொன்னதும், அவருக்கு தூக்கிவாரிப் போட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யார் என தெரியாமல் இருப்பதற்கு எப்படியும் தனக்கு திட்டுதான் கிடைக்கும்? என காவலர் நினைத்திருந்தார்.
ஆனால், காவல் கண்காணிப்பாளர் அவரை எதுவும் சொல்லாமல், நான் ஆய்வுக்கு வந்திருக்கிறேன் அதிகாரிகளை வரச்சொல்லுங்கள் என கூற, உடனே தகவல் பறக்க சற்று நேரத்தில் வெளியில் சென்று இருந்த காவலரும், அதிகாரிகளும் மேற்கு காவல் நிலையத்தில் ஆஜராகினர்
பின்பு கோப்புகளை பார்வையிட்டு சென்றார்.
செய்தி உதவி:-
S.ரெங்கசாமி