மாரண்டஅள்ளியில் ஏ.டி.எம்.மில் பொதுமக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த பிரபல ஏ.டி.எம் திருடன் கைது.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் ஏ.டி.எம்.மையங்களுக்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்க தெரியாதா, அப்பாவிகளுக்கு பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் இரகசிய குறியீடு நெம்பரை பெற்று பின் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு, உடனடியாக வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம் க்கு சென்று முழு பணத்தையும் எடுத்து பலரை ஏமாற்றி வந்த பலே திருடனை போலீசார் தேடி வந்த நிலையில்
கடந்த 18ம் தேதி நமாண்டஅள்ளியை சேர்ந்த பால் ஊற்றும் தொழிலாளி நந்தகுமாரின் மனைவி சரஸ்வதி (வயது.40) என்பவர் மாரண்டஅள்ளி இந்தியன் வங்கி முன்பு உள்ள ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க வந்தார்.
இவருக்கு ஏ.டி.எம். இல் பணம் எடுக்க தெரியாது என்பதால் அவரிடம் அருகிலிருந்த நபர் உதவி செய்வது போல் பேசி பணம் எடுத்து தருவதாக கூறி அவரிடமிருந்து ஏ.டி.எம்.கார்டு மற்றும் இரகசிய குறியீடு நெம்பரை பெற்று பணம் எடுத்து தருவது போல் நடித்துள்ளார். பின்னர் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு, உடனடியாக வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம் க்கு சென்று அவரது கணக்கில் இருந்து 6, ஆயிரத்து 900 ரூபாய் எடுத்துள்ளார்.
இதையறிந்த சரஸ்வதி மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார்,
கொள்ளையனை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று மாரண்டஅள்ளி ஏ.டி.எம் அருகே சந்தேகபடும்படியான நபர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது,
உடனடியாக மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார் ஏ.டி.எம் மையத்திற்குள்ளேயே திருடனை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரித்ததில்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரதியார்நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ரவி (36). என்பதும் ஏ.டி.எம் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும்
ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.