நகை திருடிய 2 பேர் கைது
மதுரையில் சித்திரை திருவிழா நடந்தது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் வழிப்பறி கும்பல் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடலாம் என்று கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் திருடுபோனது.
மதுரை எஸ்.ஆலங்குளம், கமலேசுவரன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அங்கம்மாள் (60). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
தல்லாகுளம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் மனைவி சங்கரேசுவரி (62). இவர் ரேஸ்கோர்ஸ் சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
புதூர் மண்மலை மேடை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் கலெக்டர் பங்களா அருகே நின்று கொண்டி ருந்தார். அடையாளம் தெரியாத மர்மகும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பியது.
மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சுந்தரி (60). இவர் டி.ஆர்.ஓ. காலனியில் நின்று கொண்டி ருந்தார். அவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. சென்னை பனப்பாக்கம், நாராயணன் மனைவி சீதம்மாள்(74). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடம் மர்மகும்பல் 4 பவுன் நகைைய பறித்து தப்பியது.
ஆத்திகுளம் கனகவேல் நகர் ராமலிங்கம் மனைவி சண்முகவடிவு. இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடமும் மர்ம கும்பல், 5 பவுன் நகையை பறித்து தப்பியது. ஆனையூர் செந்தூர் நகர் சோனைமுத்து மனைவி நாகம்மாள்(70). இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தபோது 3 பேர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
மதுரை வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகம் (53). இவரிடம் மர்ம கும்பல் 9 பவுன் நகையை பறித்து தப்பியது. மதுரை அருகே உள்ள திருமால்புரம் இந்திரா நகர் இதயதுல்லா மனைவி ராஜாத்தி (64). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தமுக்கம் பஸ் நிறுத்தம் வந்தார். அவரிடம் 2 பவுன் நகை பறிக்கப்பட்டது.
இவ்வாறு மதுரை மாநகரில் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் பறிக்கப்பட்டன. இதில்ெ ெதாடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதிகளில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் குற்றவாளிள் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமுளிபேட்டை பாபு மனைவி வில்டா (62), மேற்குவங்காள மாநிலம் கல்கத்தா ராபின் நகரை சேர்ந்த ரவிபிரசாத் மனைவி லதா (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பிக்பாக்கெட் அடித்தவர் கைது
தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தில் தேவன் (37). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக யானைக்கல் பாலம் பகுதியில் நின்று கொண்டி ருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு வாலிபர் செந்தில்தேவனிடம் செல்போன், பவர் பேங்க், ப்ளூடூத் ஆகியவற்றை அபேஸ் செய்து தப்ப முயன்றார். செந்தில் தேவன் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விளக்குத்தாண் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் செல்லூர் மேலதோப்பை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் எம்.கே.புரம் பகுதியில் நடந்து சென்றார். சத்துணவு கூடம் ரோட்டில் 3 பேர் கும்பல் பால்பாண்டியை வழிமறித்து கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து தப்பியது. இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்