தருமபுரியில் பரபரப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் காரிமங்கலத்தை சேர்ந்த கஸ்தூரி, அவர் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் 27 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும் விபத்து இழப்பீட்டுத் தொகையை தாமதம் இன்றி வழங்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.