மேல அனுப்பானடியில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு…..
மதுரை கீரை துறை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கீரை துறை போலீசார் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிந்தாமணி ராஜம்மாள் நகரைச் சேர்ந்த நல்லுசாமி 46, ரகுராமன் மற்றும் அவருடைய மனைவி பஞ்சு ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நல்லசாமியை கைது செய்தனர்.
கீரைத்துறை போலீசார் ரகுராமனையும் அவர் மனைவி பஞ்சு அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.