நீதி மன்றத்தீர்ப்பு
Delhi Hight Court WP (crl) No.1214/2017 Devesh singh chauhan vs state.
Decided 26.04.2017
நோயாளியையயே பிணைக் கைதியாக்கிய கொடூரம்
முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மருத்துவர் பாசத்தோடு குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போல் பழகி குடும்ப மருத்துவராகா விளங்கிடுவார்.
ஏதாவது உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரிடம் சென்றால் ஒரு ஊசி போட்டு பாட்டிலில் சிவப்பு கலரில் ஒரு மருந்து கொடுப்பார் நோயாளி உடல் சரியாகி ஆரோக்கியமாக தன் வழக்கமான தொழிலுக்கு சென்று விடுவார்.
ஒரு நண்பரின் தந்தை உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் மிகவும் சிரமப்பட்டார் எப்படியோ அந்த இரவை சமாளித்து விட்டு மறு நாள் இந்தியாவிலேயே சிறந்த ஒவ்வாமை மருத்துவரிடம் சென்று காண்பித்தார் அவர் 10 நாட்களுக்கு தினமும் ஒரு ஊசி போட்டால்தான் சரியாகும் என்றும் ஒரு ஊசி மருந்தின் விலை 2500/-என கூறி ஒரு ஊசி போட்டார் மேலும் இரத்தத்தில் சில சோதனைகளை செய்திட வேண்டும் என சென்னையில் மிகப் பெரிய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பினார் என் நண்பரும் அவரின் தந்தையை அழைத்து கொண்டு அங்கே சென்றார் அவரின் கையில் ஒரு ஊசி மருந்து மற்றும் டாக்டரின் கட்டணம் 500 போக மீதம் 2500/- இருந்தது. இரத்த பரிசோதனைக்கு 2500 போதும் என்று நினைத்து அங்கு சென்றார் பரிசோதனை கூடத்தில் வரவேற்பரையில் அமர்ந்திருந்த ஒரு பெண் சார் இந்த பரிசோதணைகளின் முடிவு தெரிய 3 நாட்களாகும் அதற்குறிய தொகை 25000/-ரூபாயை கட்டி விட்டு செல்லுங்கள் என்று கூறினார். நண்பரோ அதிர்ச்சியில் உறைந்து விட்டார் ஆனாலும் தனது வயதான தந்தையாயிற்றே மருத்துவ பரிசோதனை கூடத்தை விட்டு வெளியே வந்து நகையை அடமானம் வைக்க செல்லுவதற்காக ஒரு ஆட்டோ பேசினார் அவர் முகத்தில் இருந்த சோகத்தை கண்ட அந்த ஆட்டோ ஓட்டுனர் விபரத்தை கேட்டு விட்டு அவரும் அதிர்ச்சியானார்.
அவர் என் நண்பரிடம் சார் இதே சாலையில் ஒரு வயதான அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவர் இருக்கிறார் எதற்கும் அவரிடம் உங்கள் தந்தையை அழைத்து செல்லுங்கள் என்றார்.
நண்பரும் அந்த அனுபவம் வாய்ந்த பழைய மருத்துவரிடம் அழைத்து சென்றார் அவர் கடுகு போன்ற ஒரு மாத்திரையை அவர் நாக்கின் அடியில் வைத்துக்கொள்ள சொன்னார் சில மாத்திரைகளை பொட்டலமாக மடித்து கொடுத்தார் என்ன மாயம் அவரின் தந்தையின் ஒவ்வாமை போன இடம் தெரியவில்லை. நண்பரிடம் அந்த மருத்துவர் வாங்கிய கட்டணம் எவ்வளவு தெரியுமா? வெறும் 30 ரூபாய்தான் இன்றைய சில பெரிய மருத்துவர்களின் சில மருத்துவ மனைகளில் சாதாரண காய்சலோ அல்லது வேறு ஏதாவது பெரிய பிரச்சனையோ ஒரு நோயாளியிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு பறிமுதல் செய்திட வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் செயல்பட்டு வருகின்றன உள்ளே நுழைந்த உடனேயே 50000 கட்டு அந்த சோதனை செய்இந்த ஸ்கேன் செய் என்று மூளைச்சலவை செய்து நோயாளியை நோயாளியின் குடும்பத்தை நடுநடுங்க செய்திடுவர்
இதில் மன்னிக்க முடியாத கொடுமை என்னவென்றால் 50000 ரூபாய் கட்டிய அந்த நோயாளி எப்படியோ அதிஷ்டவசமாக குணமாகி மொத்தம் 58000 ரூபாய் செலவாகி இருக்கும் அந்த பாக்கி 8000 த்தை கட்டினால்தான் நோயாளி மருத்துவ மனையை விட்டு வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவர் இல்லையேல் மருத்துவமனை நிர்வாகம் அவரை விடாமல் ஏறக்குறைய பிணைக்கைதியை போல் வைத்து கொள்ளும் இதை படிக்கும் போது நமக்கு இரத்தம் கொதிக்கிறது அல்லவா? அதே மனநிலையில்தான் இது போன்ற வழக்கினை விசாரணை செய்த நீதியரசர்களுக்கு ஏற்பட்டது.
டில்லியில் கங்காராம் மருத்துவ மனையில் ஒரு நோயாளி சிகிச்சை முடிந்த பிறகு பாக்கி தொகை கட்டினால்தான் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார் என நோயாளியின் மகனிடம் சிறிது கூட இரக்கம் இல்லாமல் கூறி விட்டது. இது பற்றிய வழக்கு டில்லி அமர்வு உயர் நீதி மன்றத்தில் நீதியரசர்கள் Vipin sanghi மற்றும் Deepa sharma அவர்கள் முன்னிலையில் வந்தது.
நீதியரசர்கள் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதிர்ச்சியில் உறைந்து விட்டனர் பண பாக்கிக்காக நோயாளியை பிணைக்கைதி போல மருத்துவமனையில் வைத்திருக்கும் கங்காராம் மருத்துவமனைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர் இது போன்ற செயல்களை எந்த மருத்துவ மனையும் செய்திட கூடாது. என எச்சரிக்கை விடுத்து அந்த நோயாளியை வீட்டிற்கு அழைத்து சென்றிட அனுமதித்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.