Police Recruitment

வனவிலங்குகளை வேட்டையாட உபகரணங்கள் வழங்கிய பேட்டரி கடைக்காரர் கைது

வனவிலங்குகளை வேட்டையாட உபகரணங்கள் வழங்கிய பேட்டரி கடைக்காரர் கைது

பென்னாகரம் பகுதியானது அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி. இந்த பகுதியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு, மசக்கல் காப்புக்காடு, பேவனூர் காப்புக்காடு, ஒட்டப்பட்டி காப்புக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காப்புக்காடுகளை கொண்ட அடர் வனப்பகுதி.

சமீப காலங்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டை யாடப்பட்டு வருகின்றனர்.

பென்னாகரம் பகுதியில் இருந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவல வின்சென்ட், வேட்டை தடுப்பு சரக அலுவலர் ஆலய மணி, பென்னாகரம் வனவர் முனுசாமி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழுவினர் பென்னாகரம் பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகள் தோறும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முள்ளுவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் முயலை வேட்டை யாடுவதற்கு பேட்டரியின் மூலம் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், ஒயர், மஞ்சள் நிற மின் விளக்கு ஆகியவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து கடை உரிமையாளரான முள்ளுவாடி பகுதியைச் சேர்ந்த நவாஸ் (50) என்பவரை சிறப்பு படையினர் விசாரணைக்காக மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட தேவையான மின் உபகரணங்கள் தயார் செய்து வழங்குவது உறுதியானது அவருக்கு அபராதம் விதித்து கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இதனால் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.