8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்' - சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்சென்னையில் நடுரோட்டில் 13 மூட்டைகளுடன் காத்திருந்த ஐயப்பன் என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். மூட்டைகளில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் இருந்தது தெரிந்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியில் 13 மூட்டைகளுடன் இளைஞர் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற போலீஸார்,
அந்த இளைஞரிடம் மூட்டைகளில் என்ன இருக்கிறது. அதை ஏன் நடுரோட்டில் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர், `சார் இது பண மூட்டைகள்’ என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே பணமூட்டைகளோடு அந்த இளைஞரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அசோக்நகர் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் கே.கே.நகர் போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ஐயப்பன் (47), திருஞானசம்பந்தம் தெரு, திருவள்ளூர் என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது கேரளாவிலிருந்து பணத்தை தனியார் பஸ்சில் கொண்டு வந்தேன். என்னை அழைத்துச் செல்ல வரவேண்டிய கார் இன்னும் வரவில்லை என்று கூறினாராம்.ஐயப்பன் வைத்திருந்த பண மூட்டைகளில் 27 லட்ச ரூபாய் இருந்தது. ஆனால், அதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதனால் ஐயப்பன் மற்றும் பண மூட்டைகளை வருமானவரித்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தற்போது ஐயப்பனிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,“கேரளாவிலிருந்து சென்னைக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறைகளையும் வாங்கிக் கொண்டு வரும் ஐயப்பன், அதை சென்னை வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் கொடுப்பார். இந்தத் தொழிலை ஐயப்பனின் தந்தை பெருமாள் செய்துவந்துள்ளார். தற்போது ஐயப்பன் செய்துவருகிறார். இவரிடம் 20 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளும் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்லறைகளும் இருந்தன” என்றனர்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷம் அம்பத்தூர்