Police Recruitment

620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

620 பேருக்கு போலி முகவரியில் சிம் கார்டு விற்றவர் கைது – சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் போலியாக ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவர், தனது பெயரில் வேறு சில நபர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (பொ) கோடிலிங்கம், காவல்ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த ராயன்(38), வெங்கடேஸ்வரா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் சிம் கார்டு டீலர்ஷிப் கடை நடத்தி வந்தார். இவர் 620 சிம் கார்டுகளை போலியாக ஆக்டிவேஷன் செய்துள்ளார். தனது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வருவோரின் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியில் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராயன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 செல்போன் மற்றும் 3 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.