காவல் துறையில் உளவுப்பிரிவுக்கு தகவல் சொல்லுதல்
இந்த உளவுப் பிரிவு என்பது எல்லோரும் நினைப்பதை போல் அரசியல்வாதிகளை வருமான வரி செலுத்தாத நபர்களை சினிமா நட்சத்திரங்களை மற்றும் சமுதாய விரோதிகளை கண்காணிக்க மட்டும்தான் என்பதில்லை இந்த பிரிவு அதிகாரிகள் தக்க உடுப்பு அதாவது யூனிபார்ம் அணிய வேண்டியதில்லை
இவர்கள் ஒவ்வொரு பகுதிவாரியாக நியமிக்கப்பட்டு காவல்துறையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் இவர்களின் முக்கிய பணிகளில் ஒன்று காவல் நிலையத்திற்கு யார் யார் வருகிறார்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்புதான்.
அதில் முக்கியமானது காவல்துறையினர் என்னென்ன தவறுகள் செய்கின்றனர் என்பதையும் கண்காணித்து தனது மேல் அதிகாரிகளுக்கும் அவர் மூலம் அரசுக்கும் தகவல் தருவதுதான்..
உள்ளூர் காவல்துறையினர் எப்படி தங்கள் பகுதியில் குற்றம் கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டுள்ளது என அரசுக்கு அறிக்கை சமர்பிக்கிறார்களோ அதே போல் இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் பகுதிக்கான ஆண்டறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என தெரிகிறது இதில் மிகவும் கவணிக்க தக்க விசயம் காவல்துறை அறிக்கை உண்மையில்லையென்றால் அதன் உண்மை நிலையை மேலதிகாரிகளுக்கும்அவர்கள் மூலம் அரசுக்கும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்றம் அதிகரித்துதான் இருக்கிறது என காவல்துறைக்கு எதிராக அறிக்கை தரவும் வேண்டும் எனவும் தெரிகிறது.